மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

வைரமுத்துவின் பெய்யென பெய்யும் மழை கவிதை தொகுப்புகள் VI- பால்வினையாளி


பால்வினையாளி 


ரசனின் கட்டளையுடன் வந்த ஆடவனைச் சேராத
கணிகை ஆயிரம் கசையடிக்கு ஆளாதல் வேண்டும் அல்லது
ஐயாயிரம் பணம் தண்டமிறுத்தல் வேண்டும்.
                                                                                   -கௌடில்யர்(அர்த்தசாஸ்திரம்)

ரு பெண்ணை இச்சையுடன் நோக்குபவன் எவனும்
ஏற்கனவே தன்னுள்ளத்தில் அவளோடு விபசாரம்
செய்தாயிற்று.
                                                                                    - பைபிள்
பொருட்பெண்டிர் பொய்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழி இயற்று
                                                                                  - திருக்குறள் 

விபசாரம் புரிந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான
தண்டனையாக தலா நூறு கசையடிகள்
கொடுக்கப்படவேண்டும் .
                                                                                - திருக்குர் ஆன்


கவிதை :-

ட்கார்
   பெயர் சொல்
   பெண்ணே.......

          அப்பா அம்மா இட்டது 
          மகாலட்சுமி 
          மாமா சூட்டியது
          சுகப்பிரியா

*தொழில்?

              உலகின் மிகப் பழைய
              தொழில் .

* வயது...?

            ஆறு வருடமாய்ப்
            பதினாறு.

* எடை.....?

            எடை பார்க்கும் எந்திரம்
            எடை பார்ப்பதில்லை.

*.உயரம் ....?

             வறுமைக்கோட்டில் 
             தலை தட்டும் உயரம் 

* நிறம்....?

              மாறிக்
             கொண்டேயிருக்கும்

* உன் போன்றோர் தோன்ற
  எது காரணம் ?

            செல்வத்தின் எச்சமும்
            வறுமையின் உச்சமும்

*. இதில் சகிக்க முடியாதது..?

               இங்கேவந்து வீடு நினைந்து
               ஆண்கள் சிலபேர் அழுவது

*. அதிகம் கேட்ட பொய்கள்..?

                மீண்டும் சந்திப்போம்

* இலக்கியப் பரிச்சயம் ....?

                குறள்கூட ஒன்று சொல்வேன் 

* காதரச் சொல் கேட்ப்போம் .....

                தக்கார் தகவிலர் என்பது அவரவர்

                உச்சத்தார் காணப் படும்.

* இரைப்பை நிரப்பவா       
   கருப்பையைப் பட்டினியிட்டாய்...?

                சில உறுப்புகள்  அனாவசியம்
                குடல்வால்   
                இரண்டாம் கிட்னி 
                ஆறாம் விரல்
                எனக்குக் கருப்பை 

* எதுவரைக்கும் இத்தொழில்...?

               திருமணம்- எய்ட்ஸ்
               இரண்டிலொன்று முந்தும்வரை 

                       ********


பூமியின் மீதொரு கண்ணீர்த்துளி
முதல் விலைமகள் அழுததுளி

சாத்திரம் மதம் சட்டம் இலக்கியம்
எல்லா விரல்களும் துடைக்கப்போய்
ஆசிர்வதித்த அதே துளி

முட்டையிட்டு முட்டையிட்டுக்
கடலாய்ப் பல்கிய கண்ணீர்த்துளி

மாறும் உலகில்
மாறாத ஒன்றாய்...
மாதவி மகளொருத்தி
கண்ணகியானால்
கண்ணகி மகளொருத்தி
மாதவியாய்....

********

மீண்டும்
ஈரம் சேராத முத்தம்
மூலம் சேராத தழுவல்

ஒட்ட வைத்த  புன்னகை
ஒலிப்பதிவுப் பேச்சு
அவரவர் தேவை தீர்ந்தும்
அவள் தேவை தீராத வெறுமை

சிகரெட் வாசனை கழிய
சற்றே திறந்த ஜன்னல்வழி கசியும்
'பெண்ணுரிமை கோஷங்கள் '

ஜன்னல் இழுத்தடைத்துத்
தயாராகிறாள்
இன்னொரு பந்திக்கு
இலை கழுவ. .......

வைரமுத்துவின் பெய்யென பெய்யும்மழை கவிதை தொகுப்புகள் V-சுதந்திரம்







                                                                  சுதந்திரம்


மேடையிலொருவன் பொய்குரைப்பான்
தாவி மேடை ஏறித்
தலையிற்குட்ட முடியவில்லை

சூரிய நிலாக்களாய்க்
கண்ணுக்கழகிய பெண்கள்
கடந்தேகும் போதெல்லாம்
அழகி  நீங்களென
வாயாரச் சொல்ல வலிமையில்லை

ண்ணீரே எண்ணெயாய்த் 
தாமரைகள் விளக்கெரிக்கும்
குளம்கண்டால் 
ஓருடையும்  களையாமல் ஓடிக்குதித்து
நீர் குடைந்தாட நேரமில்லை

நீண்டுகிடக்கும் நெடுஞ்சாலையில்
வேப்பமரம் விரித்த நிழற்பாயில்
துண்டு தலைக்கு வைத்துத்
துயில் கொள்ள இயலவில்லை

நீர்வழிப்படூஉம் புனைபோல் நானும்
நதிவழிப்பட்டுக் கடலைடயக் கூடவில்லை

யிலில் வரும் சில வியாபாரிகள்
எட்டுக்கட்டையில் இலக்கியம் பேசுகையில்
அபாயச்சங்கிலி பிடித்திழுக்கும்
ஆண்மையின்னும் கூடவில்லை

டன்கேட்க்கப் போனவீட்டில்
உப்புக்கரிக்கும் உணவைத்
துப்பித் தொலைக்கத் துணிவில்லை

சிலரது மரணத்தை
தேசிய லாபமென்று
அறிக்கையிடத் திராணியில்லை

முதலமைச்சர் வேலைகோரி
முதலமைச்சருக்கே சொல்லச்சொல்லும்  
மூடப்பரிந்துரை மூட்டைகளை
முகத்தில் விசிறியடிக்க முடியவில்லை

தேசியகீதம் இசைக்கும் நேரம் 
பிளிரும்- கனைக்கும்-பேசும்-நகரும் பிராணிகளை 

வண்டலூர் அனுப்ப வசதியில்லை 

னிப்பு-ஊறுகாய்-நெய்யெல்லாம்
மூக்கோடு முடிகின்றன
நாற்பது வயதானால் நாவுக்கு உரிமையில்லை

ண்ணெய்க்குளியலின் பிற்பகல் தூக்கத்தை
வைத்தியர் சட்டம் வழங்கவில்லை

ழுத மை வேண்டும்
வானத்தின் நீலத்தில்
சில குடங்கள் கேட்டேன்
மசியவில்லை

வான்குடைய வேண்டும்
சிட்டுக் குருவிகளின் சிறகுகளை
கடன் கேட்டேன்

தரமாட்டான் மனிதனென்று 
தரவில்லை 

ற்றை மேகமாய்க் காடுகடக்க
ஒற்றைத் தேன்துளியாய்ப் பூவுள் உருள
நீண்டகனவு...... நிறைவேறவில்லை

குறைந்தபட்சம்
ஞாயிறு மட்டுமேனும்
எட்டுமணித் தூக்கம் இயலவில்லை

ழைய பெரியவரே
பாலகங்காதர திலக்!
சுதந்திரம் எனது பிறப்புரிமைஎன்பது
சும்மா.

வியாழன், 10 பிப்ரவரி, 2011

வைரமுத்துவின் பெய்யென பெய்யும் மழை கவிதை தொகுப்புகள் IV - வாழ்க்கை



முதல்பாகம் :-

கனவு நுரைக்கும் கண்கள் 
காற்றின் சுதந்திரம்

தொட்டுப் பார்க்க பறவைகள்
பட்டுத் தோல் நாய்க்குட்டி

கொஞ்சம் பிசாசுக் கதைகள்
சிறகு முளைத்த குதிரைக் கனவுகள்

திட்டாத மாதா
அடிக்காத பிதா
கிள்ளாத குரு

தலைபுதைத்துறங்கப் பாட்டிமடி  
மீதிச்சில்லரை   கேட்காத தாத்தா
ஆசைத் தின்பண்டம்
அத்தைமார் முத்தம்

இரண்டாம் பாகம்:-

இருளின் நிறத்தில்
ஒளிகொண்ட  மீசை

இஸ்த்ரிபோட்ட மேகம் போல்
உடம்பில் படியும் உடை

அதிகாலைத் தூக்கம்
அடிக்காத அலாரம்

அழகாய்க் காட்டும் கண்ணாடி
கதவில்லாத குளியலறை

ஜன்னலுக்குள் மூக்குநுழைத்துக்
கிளைகளும் தலையாட்டி
பாடம் கேட்கும் வகுப்பறை

ஒருமுறை பயின்றால்
உள்வாங்கும் மூளை

தோல்விக்கான  காதல்
ஒன்றிரண்டு

வெற்றிக்கான காதல்
ஒன்று

சேமிக்கும் உத்தியோகம்
செலவழிக்காத இளமை
இரைச்சலற்ற கல்யாணம்

மூன்றாம் பாகம்:-

சுயாட்சியான  தாம்பத்யம்

மல்லிகைபூச் சூட்டாமல் 
புரிந்துகொள்ளும் மனைவி

உப்பு மூட்டை சுமக்க
ஓரிரண்டு பிள்ளைகள்

நாட்கள் என்னும் முன்
விடைபெறும் விருந்து

நேர்வழி வந்த நிறைபொருள்

சொந்தச் செலவில் பயணங்கள்

தான்செய்த தவறொன்றும்
செய்யாத பிள்ளைகள்

தனது சாயலில் பிறந்த பேரன்கள்

நான்காம் பாகம்:-

வளையாத கைத்தடி
வலுக்கத குளியலறை

செரிக்கின்ற உணவு
சீரகத் தண்ணீர்

உயரம் குறைந்த தலையணை
குறட்டை சகிக்கும் மனைவி

சிறுநீர் வந்து
அடிக்கடி முட்டாத ஆழ்தூக்கம்

இப்போது கன்னிகழிக்க
எப்போதோ வாங்கிய புத்தகங்கள்

அசையாப் பற்கள்
ஆடாத் தலை

பிரியாத நாய்
பேத்திகளின் ஸ்பரிசம்

வைத்தியம் பார்க்க சொந்தப்பணம்

சுத்த சைவம்
சுடாத வெந்நீர்

சொல்லாத தவறுகள்
சொல்லிச்  சுவைக்கப்
பழைய தோழர்கள்

மரணத்தை வரவேற்று
விசிலடிக்கும் மனசு

அடங்கிய பின்னும்
சிரித்த முகம்

பட்டியல் இதனில்
பாதியடைந்தால்
நீதான் ராஜா

பாதிக்கு மேலென்றால்
சக்கரவர்த்தி

முற்றுமடைந்தால்
நீதான் கடவுள்.


வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

ஏனோ புரியவிலை ??????

பொங்கலுக்காக  பைக்கில் ஊருக்கு  சென்று கொண்டு இருந்தேன் , ஊருக்கு அருகாமையில் வந்த போது  அதற்கு சற்று முன்பே  விபத்தொன்று நடந்திருந்தது , சாலையின் நடுவில் ஒருவர் அடிபட்டு இறந்து  கிடப்பது தெரிந்தது, அருகில் அவர் மீது மோதிய பஸ்சும் சற்று தூரத்தில் அவர் வந்த பைக் முற்றிலும் சிதைந்த நிலையிலும் கிடந்தது,

விபத்திற்கு கரணம் பேருந்தின்  வேகம் என்பதை விபத்தை நேரில் பார்த்த பலரின் பேச்சில் தெரிந்து கொள்ள முடிந்தது,,,,, அடிபட்டு இறந்தவருக்கு 35 வயது இருக்கும், அவர் கொண்டு வந்த பையும் துணிகளும், பொருட்களும் ரோடெங்கும் சிதறி இருந்தது, அவைகளை பார்க்கையிலேயே  தெரிந்தது அவரும் விடுமுறையை கொண்டாட எங்கோ சென்று கொண்டு இருந்தது.......நான் வீடு வந்து சேர்ந்த பின்பும் அவரின் முறிந்திருந்த கையும் காலும், பாதி சிதைந்த முகமும் திரும்ப திரும்ப மனதில் தோன்றியவண்ணம் இருந்தது, பஸ் டிரைவர்  வேகம் தவிர்த்து இருந்தால் ஒரு  உயிரிழப்பை  தவிர்த்திருக்கலாம் ,  ஆனால் விசேஷ நாளில் அதிக ட்ரிப் அடிக்கலாம் என்ற அவரின் எண்ணம் ஒருவரை பலி வாங்கிவிட்டது, அந்த ஓட்டுனர் மட்டும் அல்ல அவரைப் போல் பலரும் விசேஷ காலங்களில் மிக வேகமாக வண்டிகளை இயக்குவதை பார்த்திருக்கிறேன், எதற்காக  இந்த வேகம்?  எத்தனையோ விபத்துக்களை பார்த்தபின்பும் வேகத்தை தொடர்வதை சரியென்று எப்படி கொள்வது ? என் வேலைக்காக நான் எப்போதும் பைக்கிலேயே சுற்றுபவன்,  ஒவ்வொருமுறை   பைக் ஓட்டும்  போதும் பயத்தோடே ஓட்டவேண்டியுள்ளது , வேகமாக செல்ல பயந்து அல்ல எவர் வேகத்திற்கோ நான் பலியாகிவிட கூடாது என பயந்து,


ஆனால்  பிறர் நலனில் அக்கறை இன்றி  தன் வேகத்திற்கு பிறரை பலிகொடுக்கும் குணம் பரவலாகவே உள்ளது.... ஆழமாய் பார்த்தால் இது வெறும் வாகனம் ஓட்டுபவர்களுக்கு மட்டுமே உரிய  குணம் அல்ல, இதுவே நம்மில் பெரும்பாலோரின் பொதுவான   அடையாளமாக உள்ளது .... தன் சுகத்திற்கு பிறர்நலனை காவு கேட்கும் குணம்,


ரோட்டில் நடக்கும் போதும், பஸ்சில் செல்லும் போதும்  எச்சை துப்புவது,


 போது   இடத்தில சிகரெட் பிடிப்பது,

குறுகலான சாலையில் வேகமாய் வண்டியில் பறப்பது, பொதுக்கழிப்பிடத்தில் பான்பராக் எச்சையை துப்புவது,  பொது சொத்துக்களை சுத்தமாக உபயோகிக்க விரும்பாததும்,


வண்டியில் சைலேன்செரை   பிடுங்கி விட்டு  பறப்பது,
பதற வைக்கும் ஹாரன் வைப்பது,
செல்போன் பேசியபடி வண்டி ஓட்டுவது,

தான் வீட்டு குப்பையை அடுத்த வீட்டு வாசலில் குமிப்பது,
 நடு ரோட்டில் திடிரென்று வண்டியை நிறுத்தி ஆட்களை ஏற்றி இறக்குவது அடுத்தவருக்கு முறைப்படி  வருவதை குறுக்கே புகுந்து தனதாக்கி கொள்வது,

freeleft என தெரிந்தும் அடுத்தவருக்கு இடம் தராமல் வண்டியை நிறுத்தி கொள்வது

தன்னை விளம்பரப்படுத்த  தகுதி இல்லாதவர்களை தலைவன் என்பது,

அயோக்கியன் என தெரிந்தும் ஆண்டவன் என் புகழாரம் சூட்டுவது,]
தான் விரும்பிய விதமாய் பிறர் இல்லையெனில் அவர்களை அழிக்க முயல்வது,  மற்றும் இன்னும் பல,  என இந்த குணத்திற்கு உதாரணம் நிறைய உண்டு,  இதன் உச்சமே கொலை, கொள்ளை, கற்பழிப்பு, லஞ்சம் ஊழல், தீவிரவாதம் என்றால் அதை மறுக்க முடியாது.  
உணவிற்காக ஒரு உயிரை கொள்வதை புரிந்து கொள்ள முடிகிறது, ஆனால் தனது அலட்சியத்திற்கு இன்னொருவரை கொல்வதைதான் புரிந்து கொள்ள முடியவில்லை,
நான் பட்டியல் இட்டது மட்டும் அல்ல இது போல இன்னும் பலவற்றை தெரிந்தோ தெரியாமலோ ஒவொருவரும் செய்து கொண்டுதான் இருக்கிறோம்,

இத்தனை ஒழுங்கீனங்களை நம்மிடையே வைத்திருக்கும் பொது நம்மை ஒழுக்கமானவர்கள் என்று கூறிக்கொள்வது எப்படி? அல்லது
இவை எதுவும் ஒழுக்கம் என்பதில அடங்காதா ?

ஒழுக்கம் என்பதை வெறும் குறிசார்ந்த கோட்பாடாக மட்டும் எண்ணுபவர்களின் மனோநிலை ஏனோப்புரியவில்லை?????????????





வியாழன், 27 ஜனவரி, 2011

வைரமுத்துவின் பெய்யென பெய்யும் மழை கவிதை தொகுப்பு III - முரண்பாடுகள்;







போதிமரம் போதும் 
புத்தனைப்  புதைத்துவிடு

கொடிகள் காப்பாற்று 
தேசத்துக்கு தீயிடு

சின்னங்கள் முக்கியம்
சித்தாந்தம் எரித்துவிடு

கவிஞனுக்குச் சிலை 
கவிதைக்கு கல்லறை 

உரை போதும் பிழைப்புக்கு
மூலம் கொளுத்திவிடு

மன்னனுக்கு மகுடமிடு
மக்களக்கு லாடமடி

நீதிமன்றம் சுத்தம் செய்
நீதிக்கு குப்பைகூடை 

கற்றது மற
பட்டத்துக்குச் சட்டமிடு

பெட்டி தொலைத்துவிடு
சாவி பத்திரம்

தலைவனை பலியிடு
பாதுகை வழிபடு

அகிம்சை காக்க 
ஆயுதம் தீட்டு 

பத்தினிக்கு உதை
படத்துக்கு பூ 

காதல் கவியெழுத 
காமம் நாமெழுத 

கற்பு முக்கியம் 
கருவைக் கலை

பசியை விடு
கடிகாரம் பார்த்துண்

ஜனநாயகம் காப்பாற்று
ஜனங்களை கொன்றுவிடு

முரண்பாடே நடைமுறையாய்க்
நடைமுறையே முரண்பாடச் 
சென்றுதேய்ந்துருகின்ற  சிறுவாழ்வில்
முரன்பாடெனக்குள் யாதென்று
மூளைபுரட்டி யோசித்தேன்

மிருகத்தைக் கொல்லாமல்
தேவநிலை தேடுகிறேன் 

திங்கள், 24 ஜனவரி, 2011

வைரமுத்துவின் பெய்யென பெய்யும் மழை கவிதை தொகுப்பு II -சிறுமியும் தேவதையும்




திடீரென்று 
மேகங்கள் கூடிப் 
புதைத்தன வானை

ஒரே திசையில் வீசலாயிற்று
உலகக் காற்று

பூனையுருட்டிய கண்ணாடிக் குடமாய்
உருண்டது பூமி 
மருண்டது மானுடம்

அப்போதுதான் 
அதுவும் நிகழ்ந்தது

வான்வெளியில் ஒரு 
வைரக்கோடு 

கோடு வளர்ந்தது
வெளிச்சமானது 

வெளிச்சம் விரிந்து 
சிறகு முளைத்த  தேவதையனது

சிறகு நடுங்க
தேவதை சொன்னது

'48 மணிநேரத்தில்
உலகப்பந்து கிழியப் போகிறது

ஏறுவோர் ஏறுக என்சிறகில்
இன்னொரு கிரகம் எடுத்தேகுவேன்'
 
இரண்டே இரண்டு 
நிபந்தனைகள் ;
எழுவர் மட்டுமே ஏறலாம்
உமக்கு பிடித்த ஒரு பொருள் மட்டும்
உடன்கொண்டு வரலாம்'

புஜவலிவுள்ள இளைஞன் ஒருவன்
சிறகு நொறுங்க ஏறினான் 

அவன் கையில் 
இறந்த காதலியின் 
உடைந்த வளையல் 
முதல் முத்தத்து ஞாபகத்துண்டு 

'இன்னொரு  கிரகம் கொண்டான் 
என்றென்றும் வாழ்க '
கொட்டிமுழங்கும் கோஷத்தோடு
சிறகேறினார் அரசியல்வாதி 

தங்கக்கடிகாரம் கழற்றிஎரிந்து
களிம்பேறிய கடிகாரம் கட்டிக்கொண்டார்

உள்ளே துடித்தது-
சுவிஸ் வங்கியின்
ரகசிய கணக்கு

இறந்துவிடவில்லையென்ற சோகத்தை 
இருமி இருமியே 
மெய்பித்துக் கொண்டிருக்கும் 
நோயாளி ஒருவர் 
ஜனத்திரள் பிதுக்கியதில் 
சிறகொதுங்கினார்

அவர் கையில் 
மருந்து புட்டி

அதன் அடிவாரத்தில் 
அவரின்
அரை அவுன்ஸ் ஆயுள் 

அனுதாப அலையில்
ஒரு கவிஞனும் சிறகு தொற்றினான்

ஜோல்னாப் பையில்
அச்சுப்  பிழையோடு வெளிவந்த
முதல் கவிதை 

தன் மெல்லிய ஸ்பரிசங்களால்
கூட்டம் குழப்பி வழிசெய்து
குதித்தாள் ஒரு சீமாட்டி

கலைந்த ஆடை மறந்து
கலைந்த கூந்தல் சரிசெய்தாள்

கைப்பையில் 
அமெரிக்கன் வங்கிக் கடன் அட்டை

கசங்காத காக்கிச் சட்டையில் 
கசங்கிப்போன ஒரு போலீஸ்காரி 
லத்தியால் கூட்டம் கிழித்துப்
பொத்தென்று சிறகில் குதித்தாள்

லத்தியை வீசி எறிந்தாள்- ஒரு 
புல்லங்குழல் வாங்கிக் கொண்டாள்


ஒருவர் 
இன்னும் ஒரே ஒருவர்
என்றது தேவதை 

கூட்டத்தில்
சிற்றாடை சிக்கிய
சிறுமியொருத்தி

பூவில் ரத்த ஓட்டம் 
புகுந்தது போன்றவள் 

செல்ல நாய்க்குட்டியோடு
சிறகில் ஏறினாள்

'நாய்க்குட்டிஎன்பது
பொருள் அல்ல- உயிர்
இறக்கிவிடு'
என்றது தேவதை 

'நாய் இருக்கட்டும் 
நானிறங்கிக் கொள்கிறேன் '
என்றனள் சிறுமி 

சிறகு சிலிர்த்தது தேவதைக்கு 

சிலிர்த்த வேகத்தில் 
சிதறிவிழுந்தனர் சிறகேறிகள்

வான் பறந்தது தேவதை 
சிறுமியோடும் செல்ல நாயோடும் .




வெள்ளி, 14 ஜனவரி, 2011

வைரமுத்துவின் பெய்யென பெய்யும் மழை கவிதை தொகுப்புகள் - விதைச்சோளம்


நண்பர் ஒருவர் ப்ளோக்கரில் வைரமுத்துவின் "பெய்யென பெய்யும் மழையை"சிலாகித்து எழுதி இருந்தார், அவர் கவிதைகள் படித்து இருந்தாலும் இந்த புத்தகம் படித்தது இல்லை, அதனால் அப்படி என்னதான் உள்ளது என்ற ஆர்வ உந்துதலில் அந்த கவிதை புத்தகத்தை வங்கி வாசித்தேன் ..... வாசித்தேன் என்பதை விட வாசிப்பில் எனை மறந்தேன் என்பதே உண்மை...தமிழின் வளமையும் அருமையும் , அதன் மீது வைரமுத்துவிற்கு உள்ள ஆளுமையும் அற்புதமாக உள்ளது, அந்த கவிதை தொகுப்பை ஒன்றன் பின் ஒன்றாக எனது ப்ளோக்கரில் வெளியிட உள்ளேன்.புத்தகம் படிக்க கிடைகாதவற்கும் அந்த கவிதைகள் சென்று சேர வேண்டும் என்ற ஆவலில் ........
இனி கவிதைகள்.......



விதைச்சோளம் :-

ஆடி முடிஞ்சிருச்சு
ஆவணியும் கழிஞ்சுருச்சு
சொக்கிகொளம் கோடாங்கி
சொன்னகெடு கடந்துருச்சு

காடு காஞ்சிருச்சு
கத்தாழை கருகிருச்சு
எலந்த முள்ளெல்லாம்
ஏழையோட உதிந்துருச்சு

வெக்க பொறுக்காம
றெக்க வெந்த குருவிஎல்லாம்
வெங்காடு   விட்டு
வெகுதூரம் போயிருச்சு

பொட்டு மழை பெய்யலையே
புழுதி அடங்கலியே
உச்சி நனையலையே 
உள்காடு உழுகலையே

வெதப்புக்கு விதியிருக்கோ
வெறகாக விதியிருக்கோ
கட்டிவச்ச வெங்கலப்பை 
கண்ணீர் வடிச்சிருச்சே

காத்துல ஈரமில்ல
கள்ளியில பாலுமில்ல
எறும்பு குளிச்சேற
இருசொட்டுத் தண்ணியில்ல

மேகம் எறங்கலியே
மின்னல் ஒன்னும் காங்கலையே  
மேற்க கருக்கலையே
மேகாத்து  வீசலையே

தெய்வமெல்லாம் கும்பிட்டுத்
தெசையெல்லாம் தெண்டனிட்டு
நீட்டிப் படுக்கையில்
நெத்தியில ஒத்தமழை

துட்டுள்ள ஆள் தேடி 
சொந்தமெல்லாம் வாரதுபோல்
சீமைக்குப்  போயிருந்த 
மேகமெல்லாம் திரும்புதையா

வாருமய்யா  வாருமய்யா
வருண பகவானே
தீருமய்யா தீருமய்யா 
தென்னாட்டுப்  பஞ்சமெல்லாம்

ஒத்தஏரு நான் உழுகத்
தொத்தப்பசு வச்சிருக்கேன்
இன்னும் ஒரு மாட்டுக்கு
எவனப் போய் நான் கேட்பேன் ?

ஊரெல்லாம் தேடி 
ஏர்மாடு இல்லாட்டி
இருக்கவே இருக்கா
இடுப்போடிஞ்ச பொண்டாட்டி 


காசு பெருத்தவளே
காரவீட்டுக்   கருப்பாயி
தண்ணிவிட்டு எண்ணைணு  
தாளிக்கத் தெரிஞ்சவளே

சலவைக்குப் போட்டாச்
சாயம்  குலையுமினு  
சீல  தொவைக்காத
சிக்கனத்து மாதரசி 

கால்மூட்ட வெதைசோளம் 
கடனாகத் தா தாயி
கால்மூட்ட கடனுக்கு
முழுமூட அளக்குறண்டி
 
ஊத்துதடி ஊத்துதடி
ஊசிமலை ஊத்துதடி
சாத்துதடி சாத்துதடி
சடைசடையாய் சாத்துதடி 

பாழும் மழைக்குப்
பைத்தியமா புடிச்சிருச்சு?
மேகத்தைக்   கிழிச்சு  
மின்னல்கொண்டு  தைக்குதடி  

முந்தாநாள்  வந்தமழை
மூச்சுமுட்டப் பெய்யுதடி
தெசைஏதும் தெரியாம
தெரைபோட்டு கொட்டுதடி

கூரை ஒழுகுதடி 
குச்சுவீடு நனையுதடி
ஈரம்  பரவுதடி
ஈரக்கொல நடுங்குதடி

வெள்ளம் சுத்திநின்னு
வீட்ட இழுக்குதடி
ஆஸ்தியில் சரிபாதி
அடிச்சுகிட்டு போகுதடி

குடிகொடுத்த காத்து
கூர பிரிக்குதடி 
மழைதண்ணி  ஊறி
மஞ்சுவரு கரையுதடி

நாடு நடுங்குதய்யா 
நச்சுமழை போதுமையா
வெதைவெதைக்க  வேணும்
வெயில்கொண்டு வாறுமய்யா  

மழையும்  வெறிக்க
மசமசன்னு வெயிலடிக்க
மூலையில் வச்சிருந்த
மூட்டையைப் போய் நான் பிரிக்க

வெதச்சோளம் நனைஞ்சுருச்சே
வெட்டியாப் பூத்திருச்சே
மொளைக்காத படிக்கு
மொளைக்கட்டிப் போயிருச்சே

ஏர்புடிக்கும்  சாதிக்கு
இதுவேதான் தலைஎழுத்தா ?
விதிமுடிஞ்ச  ஆளுக்கே 
வெவசாயம் எழுதிருக்கா?

காஞ்சு கெடக்குதுன்னு 
கடவுளுக்கு  மனுசெஞ்சா
பேஞ்சு கேடுத்திருச்சே  
பெருமாளே என்னபண்ண? 

இது விவசாயத்தின்  நிலைமையை ஒரு விவசாயியின் கண்ணோட்டத்தில் சொன்னது....